Vaasippu

பெண் எழுத்து கலந்துரையாடல்


பெண் எழுத்து : ஆண் எழுத்து விமர்சனமே வேறு

- இளமதி

 

19.04.2008 அன்று பிலிம்சேம்பர் அரங்கில நடைபெற்ற 'காலச்சுவடு 20ஆண்டுகள்  100 இதழ்கள் 250 நூல்கள்' விழாவில் பெண்  எழுத்து குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது. கவிஞர்கள் ஞானக்கூத்தன், சுகுமாரன் மாலதி மைத்ரி, சுகிர்தராணி  ஆகியோர் இந்தக்  கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

சங்காலத்துப் பெண் கவிஞர்கள் அவர்களைத் தொடர்ந்து பக்தி இயக்கக் காலகட்டத்தில் காரைக்காலம்மையார், ஓளவையார்  போன்றோரைத் தவிர அவர்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்கள் தமிழ்ப்  பரப்பில் இல்லை என்றே சொல்ல  வேண்டும். இந்த நவீனத் தமிழ்ப் பரப்பில்தான் பெண் கவிஞர்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்தச் சூழல் மிக முக்கியமானது என்றார் கவிஞர் ஞானக்கூத்தன்.

பெண் கவிஞர்கள் அவர்கள் பெண்ணாக இருப்பதனால் மட்டுமே கவிதைகளையும் சொந்த வாழ்க்கையையும் ஒப்பிட்டு  விமர்சிக்கப்படுகிறார்கள். அவர்களின் கவிதைகள் ஆபாசமானவையாக, பொதுத் தன்மை இல்லாதவையாககக் கருதப்படுகின்றன  என்றார் மாலதி மைத்ரி.

மலையாளத்தை ஒப்பிடும் போது பெண் கவிஞர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவுதான் என்றார் சுகுமாரன்.  ஑பெண்வழிகள்ஒ தொகுப்பு நூலின் முன்னுரையில் சுகுமாரன் குறிப்பிட்ட   ஑தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகள் ஒரே  பாதையில் பயணிக்கின்றன பரிமாணங்களற்றவையாக ஒரே பொருண்மையினைத் தொடர்ந்து பேசுகின்றனஒ என்ற கருத்தை   மாலதி மறுத்துரைத்தார்.

மலையாளத்தில் சொல்லும்படி இருக்கும் பெண் கவிகளின் எண்ணிக்கை அதிகமென்பதற்குத் தானே உறுதி சொல்ல  முடியுமென்றார் மாலதியின் எதிர்வினைக்கு சுகுமாரன். அதில் அவர்  ஑தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகள் ஒரே  பாதையில் பயணிக்கின்றன, பரிமாணங்களற்றவையாக ஒரே பொருண்மையினைத் தொடர்ந்து பேசுகின்றனஒ என்று  குறிப்பிட்டதை மாலதி மறுத்துரைத்தார்.

சுகிர்தராணி பேசும் போது கவிதைகளில் ஒளிவுமறைவு இல்லாமல் எழுதினால், தன்னுடைய உடலையும் மனத்தையும்  பாதிக்கின்ற விஷயத்தை அப்படியே எழுதினால். அந்தக் கவிதை எழுதும் பெண் ஒழுக்கமற்றவளாகப் பார்க்கப்படுகிறாள் என்பது  தான் இன்றைய தமிழ்ச் சூழலின் நிலை என்று குறிப்பிட்டார்.

ஆண் எழுதினால் அதை அனுபவத்திலிருந்து பிறந்த படைப்புகள் என்று கொண்டாடுவதும் பெண் எழுதினால் அதை முயைற்ற  வாழ்வின் வெளிப்பாடகவும் கருதுவதும் பெண் தன் கவிதையில் உடல்மொழியைக் கையாண்டால் அவளுக்கு இதைவிட்டால்  வேறொன்றும் தெரியாது என்ற ரீதியில் போகிற போக்கில் சொல்வதுமாகப்   பெண் எழுத்து குறித்த தவறான கருத்துகளும்  விமர்சனங்களும் வெளிப்படுகின்றன என்றார் சுகிர்தராணி.

ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கே விடுதலை கிடைக்குமென்றால் ஒரு பெண் தன்னை அதற்காக அர்ப்பணிப்பது தவறல்ல.  எங்களை இந்த சமூகம் காண்கின்ற விதமே விசித்திரமானதுதான். அரைகுறை ஆடைகளோடு திரையில்  நடனமாடுபவர்களுக்குப் பாடல் எழுதும் ஆண் கவிஞருக்கு எங்களைப் போன்ற பெண் கவிஞர்களின் எழுத்து குறித்துப் பேச,  எங்களை நடுரோட்டில் வைத்து தீயிட்டுக் கொழுத்துவேன் என்று சொல்ல என்ன தகுதியிருக்கிறது என்று கேள்வியெழுப்பினார்  மாலதி.

 

கருத்துகள்
உங்கள் கருத்து? 7 கருத்துகள்
Really this journal is waste.... skts@yahoo.com 2008-03-29
hi. i like and hope to you for give... vijay.p 2008-01-24
I like it verymuch. when iam readin... jamunashribabu 2008-01-18
அறிவி... Girijamanaalan 2008-01-11
dear kavitha mam, the article th... thamizhdhassan 2008-01-07
really good article.this is very us... Anu 2008-01-05
HI KAVITHA AKKA, Wh... vijayalakshmi 2008-01-02
எங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விதிமுறைகளும் நிபந்தனைகளும் | பொறுப்பாகாமை அறிவிப்பு

உள்ளடக்கத்தை வழங்குவோர் மீடியா மெசேஜ் இன்க். வலையக வடிவமைப்பும் பராமரிப்பும் மின்வெளி இன்ஃபோடெக்