தோழி.காம் வலையகம்/சேவைகளில், அல்லது அவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்கள், மென்பொருள், தயாரிப்புகள் அல்லது சேவைகளில் தவறுகளோ எழுத்துப் பிழைகளோ இருக்கக்கூடும். தோழி.காம் வலையகம்/சேவைகளிலும் அவற்றிலுள்ள தகவல்களிலும் பருவம்தோறும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தோழி.காம் மற்றும்/அல்லது சப்ளையர்கள் தோழி.காம் வலையகம்/சேவைகளில் எந்நேரமும் மேம்பாடுகள் மற்றும்/அல்லது மாற்றங்களைக் கொண்டுவரலாம். தோழி.காம் வலையகம்/சேவைகள் மூலம் பெறப்படும் அறிவுரையை சொந்த, மருத்துவ, நிதி சார்ந்த முடிவுகளுக்காக நம்பியிருக்கக் கூடாது. நீங்கள் தகுந்த வல்லுனரிடம் உங்கள் சூழ்நிலைக்கேற்ற அறிவுரையைப் பெற வேண்டும்.
தோழி.காம் வலையகம்/சேவைகளில் உள்ள தகவல்கள், மென்பொருள், தயாரிப்புகள், சேவைகள், தொடர்பான படங்கள் ஆகியவை சார்ந்த பொருத்தமான தன்மை, நம்பகத்தன்மை, கிடைக்கும் தன்மை, நேரப் பொருத்தம், வைரஸ்கள் அல்லது பிற அபாயகரமான உறுப்புகள் இல்லாமை குறித்து தோழி.காம் மற்றும்/அல்லது அதன் சப்ளையர்கள் எந்த விதப் பிரதிநிதித்துவமும் செய்யவில்லை. இத்தகவல்கள், மென்பொருள், தயாரிப்புகள், சேவைகள், தொடர்பான படங்கள் அனைத்தும் "உள்ளவை உள்ளபடி" எவ்வித உத்தரவாதமும் இன்றி வழங்கப்படுகின்றன. இதன் மூலம் தோழி.காம் மற்றும்/அல்லது அதன் சப்ளையர்கள் இத்தகவல்கள், மென்பொருள், தயாரிப்புகள், சேவைகள், தொடர்பான படங்கள் ஆகியவை குறித்த எல்லா உத்தரவாதங்களுக்கும் நிபந்தனைகளுக்கும்; விற்கப்படக்கூடிய தன்மை, குறிப்பிட்ட நோக்கங்களுக்குப் பொருந்துதல், கடும் உழைப்பு கூடிய முயற்சி, உரிமைகள் மற்றும் உரிமை மீறாமை தொடர்பான அனைத்து மறைமுக உத்தரவாதங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் பொறுப்பாகா என்று அறிவிக்கின்றன.
இந்த வலையகத்தில் மூன்றாம் தரப்பினர் இயக்கும் பிற வலையகங்களுக்கான மீயிணைப்புகள் இருக்கக் கூடும் ("இணைப்பு பெற்ற வலையகங்கள்"). இணைப்பு பெற்ற வலையகம் ஒன்றிற்கான மீயிணைப்பை நீங்கள் க்ளிக் செய்யும்போது, தோழி.காம் இலச்சினை, விளம்பரங்கள் மற்றும்/அல்லது தோழி.காம் தேர்வு செய்த பிற உள்ளடக்கம் இடம்பெறும் சட்டம் (ஃப்ரேம்) ஒன்று தோன்றக் கூடும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். தோழி.காமும் அதன் விளம்பரதாரர்களும் இணைப்பு பெற்ற வலையகங்களைப் பரிந்துரை செய்யவும் இல்லை, அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கவும் இல்லை எனவும் இணைப்பு பெற்ற வலையகங்களின் உள்ளடக்கத்திற்கும் அவ்வலையகங்களில் உள்ள இணைப்புகளுக்கும் அல்லது அவ்வலையகங்களில் செய்யப்படும் எந்த மாற்றங்களுக்கும் புதுப்பிப்புகளுக்கும் பொறுப்பாகவில்லை எனவும் ஏற்றுக்கொள்கிறீர்கள். தோழி.காம் இந்த மீயிணைப்புகளை உங்களுக்கு ஒரு வசதியாக மட்டுமே வழங்குகின்றன என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
குறிப்பாக உங்கள் தகவல் பரிமாற்றங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்படுவதற்கு அல்லது மாற்றப்படுவதற்கு, அல்லது உங்களால் அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட அல்லது அனுப்பப்படாத அல்லது பெறப்படாத பொருட்களுக்கு அல்லது தரவுகளுக்கு, அல்லது தோழி.காம் வலையகம்/சேவை மூலமாக நிகழ்த்தப்படும் எந்தப் பரிமாற்றத்திற்கும் தோழி.காம் பொறுப்பல்ல என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். குறிப்பாக வேறு எந்தத் தரப்பினரின் அச்சுறுத்தும், அவதூறான, ஆபாசமான, புண்படுத்துகிற, சட்டவிரோதமான உள்ளடக்கம் அல்லது நடத்தைக்கு, அல்லது அறிவுசார் சொத்துரிமை உள்படப் பிறரின் உரிமைகள் மீறப்படுவதற்குப் பொறுப்பல்ல என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். குறிப்பாக தோழி.காம் வலையகம்/சேவையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பினரால் அனுப்பப்படும் அல்லது இடம்பெறச் செய்யப்படும் எந்த உள்ளடக்கத்திற்கும் தோழி.காம் பொறுப்பல்ல என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
எந்த நேரடி, மறைமுக, தண்டனை சார்ந்த, தற்செயலான, தனியான, பின்விளைவுகளால் ஏற்படுகிற சேதங்களுக்கும் அல்லது தோழி.காம் வலையகம்/சேவைகளைப் பயன்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் அல்லது பயன்படுத்த இயலாமையால் அல்லது சேவைகளை வழங்குவதால் அல்லது வழங்கத் தவறுவதால் அல்லது தோழி.காம் வலையகம்/சேவைகள் மூலம் பெறப்படும் தகவல்கள், மென்பொருள், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொடர்பான படங்களால் ஏற்படும் எந்த வித சேதங்களுக்கும் அவை கான்ட்ராக்ட், சட்ட ரீதியான குற்றம், கவனக் குறைவு, முழுமையாகக் கடன்பட்டிருத்தல் ஆகியவற்றின் அடிப்படையிலோ மாறாகவோ இருப்பினும், சேதங்கள் ஏற்படும் சாத்தியம் குறித்து தோழி.காம் அல்லது அதன் சப்ளையர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் தோழி.காம் மற்றும்/அல்லது அதன் சப்ளையர்கள் பொறுப்பல்ல. தோழி.காம் தனது வலைப்பக்கங்களில் எந்த விளம்பரதாரரையும்/விளம்பர உள்ளடக்கத்தையும் பரிந்துரைக்கவில்லை. ஆகவே அவற்றை நம்பி செயல்படுவதற்கு முன் அவற்றின் தகவல்கள் சரியானவைதானா என்பதை தயவுசெய்து நீங்களே சரிபாருங்கள். விளம்பரங்களின் உள்ளடக்கத்தை நீங்கள் நம்புவதால் விளையும் எந்த சேதங்களுக்கும் தோழி.காம் பொறுப்பல்ல, பொறுப்பாகாது.
இந்த ஒப்பந்தம் இந்திய குடியரசின் விதிகளுக்குட்பட்டது. இதன் மூலம் நீங்கள் தோழி.காம் வலையகம்/சேவைகளின் பயன்பாட்டினால் எழும் எல்லா பிரச்சினைகளுக்கும் இந்தியாவின் தமிழக மாநிலத்தில் உள்ள சென்னையில் இருக்கும் நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கும் இடத்திற்கும் ரத்துசெய்யவியலாத வகையில் ஒப்புதல் அளிக்கிறீர்கள். தோழி.காம் வலையகம்/சேவைகளின் பயன்பாடு, இந்தப் பத்தியையும் உள்ளடக்கிய இந்த விதிகளின் ஷரத்துகள் பலன் தராத எந்த அதிகார வரம்பிலும் அனுமதிக்கப்படாது. தோழி.காம் வலையகம்/சேவைகளில் உங்களது செயல்பாட்டினால் அல்லது பயன்பாட்டினால் மூன்றாம் தரப்பினர் எவரும் எழுப்பும் கோரிக்கை, நியாயமான வழக்கறிஞர் கட்டணம் உள்பட நஷ்ட ஈடு ஆகியவற்றிலிருந்து தோழி.காம், அதன் கூட்டு நிறுவனங்கள், அலுவலர்கள், ஊழியர்கள் முதலியோருக்கு விலக்கம் அளிக்க ஒப்புக்கொள்கிறீர்கள். (1) சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லது சட்ட செயல்முறைக்குக் கீழ்ப்படிய; (2) தோழி.காம் அல்லது அதன் கூட்டு நிறுவனங்களின் உரிமைகளையோ சொத்துகளையோ பாதுகாக்க; (3) விதிமுறைகளை செயல்படுத்த; அல்லது (4) தனது உறுப்பினர்களின் அல்லது பிறரது நலன்களைப் பாதுகாக்க அவசியம் என்று தோழி.காம் உறுதியுடன் நம்பும் பட்சத்தில் உங்களைப் பற்றிய சொந்தத் தகவல்களையோ நீங்கள் தோழி.காம் வலையகம்/சேவைகளையும் அவற்றின் உள்ளடக்கத்தையும் பயன்படுத்தும் விதத்தைப் பற்றிய தகவல்களையோ உங்கள் முன்அனுமதியின்றி தெரிவிக்க தோழி.காமுக்கு உரிமை உண்டு.
இந்த ஒப்பந்தத்தை தோழி.காம் செயல்படுத்துவது தற்போது உள்ள சட்டங்களுக்கும் சட்ட ரீதியான செயல்முறைக்கும் உட்பட்டது. உங்கள் தோழி.காம் வலையகம்/சேவைகள் பயன்பாடு குறித்த அரசு சார்ந்த, நீதிமன்ற, சட்ட அமலாக்க வேண்டுகோள்களுக்குப் பணியவோ இத்தகைய பயன்பாடு தொடர்பாக தோழி.காமுக்கு வழங்கப்படும் அல்லது தோழி.காமால் திரட்டப்படும் தகவல்கள் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யவோ தோழி.காமுக்கு உள்ள உரிமையை இந்த ஒப்பந்தத்தில் உள்ள எதுவும் குறைக்கவில்லை. மேற்குறிப்பிடப்பட்ட உத்தரவாத மறுப்புகள், பொறுப்பாதல் கட்டுப்பாடுகள் உள்பட இந்த ஒப்பந்தத்தின் எந்தப் பகுதியாவது செல்லாதது என்றோ அமலாக்கவியலாதது என்றோ நடைமுறையிலுள்ள சட்டங்களின்படி கருதப்பட்டால் அந்தச் செல்லாத அல்லது அமலாக்கவியலாத பகுதிக்கு பதிலாக முதலில் உருவாக்கப்பட்ட விதிமுறையின் நோக்கத்திற்கும் ஒப்பந்தத்தின் மற்ற பகுதிகளுக்கும் பொருந்தும் செல்லுபடியாகிற, அமல்படுத்தவியலும் ஒரு பகுதி இடம்பெற்றுத் தொடரும். இந்த ஒப்பந்தம் வேறு விதமாக இங்கு குறிப்பிடப்படாத பட்சத்தில் தோழி.காம் வலையகம்/சேவைகள் தொடர்பாக தோழி.காமுக்கும் பயனாளருக்கும் இடையில் எலக்ட்ரானிக், வாய்மொழியாக, எழுத்துபூர்வமாக முன்பு அல்லது சமகாலத் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் முன்வரைவுகள் அனைத்திற்கும் பதிலாக தோழி.காமுக்கும் பயனாளருக்கும் இடையிலான ஒட்டுமொத்த ஒப்பந்தமாக அமைகிறது