விதிமுறைகளும் நிபந்தனைகளும் பின்வருவன தோழி.காம் சேவைகளின் பயன்பாட்டிற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள். தோழி.காம் வழங்கக்கூடிய மின்னஞ்சல் மற்றும் பிற சேவைகள் இதில் அடங்கும் (ஒவ்வொரு அம்சமும் ஒட்டுமொத்தமாக இனி "சேவை" எனக் குறிப்பிடப்படும்). இவற்றைக் கவனமாகப் படியுங்கள். இச்சேவையானது குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களுக்கு அல்லது ஒரு அக்கவுன்ட் தொடங்கிப் பயன்படுத்தப் பெற்றோர் மேற்பார்வை மற்றும் அனுமதி உள்ள வயதுவராதோருக்கும் வழங்கப்படுகிறது. I ACCEPT என்ற பட்டனை அழுத்திப் பதிவு செய்துகொள்வதன் மூலம் நீங்கள் அக்கவுன்ட்டிற்குத் தகுதியுடையவர் என்று தெரிவிப்பதோடு தோழி.காம் சேவைக்கான இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எல்லாவற்றிற்கும் கட்டுப்பட ஒப்புக்கொள்கிறீர்கள். இச்சேவையானது இவற்றில் உள்ள விதிமுறைகள் , நிபந்தனைகள், அறிவிப்புகள் ஆகியவற்றை எந்த மாற்றமும் இன்றி ஏற்றுக்கொள்கிறீர்கள் என்ற நிபந்தனையின்பேரில் வழங்கப்படுகிறது. உறுப்பினர் அக்கவுன்ட், கடவுச் சொல் மற்றும் பாதுகாப்பு அக்கவுன்ட் தொடங்குவதற்கு நீங்கள் பதிவுப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளபடி தற்போதுள்ள , முழுமையான, துல்லியமான தகவலைத் தந்து பதிவு பெறுதலைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதன்பின் நீங்கள் ஒரு கடவுச் சொல்லையும் அக்கவுன்ட் பெயரையும் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் கடவுச் சொல் மற்றும் அக்கவுன்ட்டின் ரகசியத்தன்மையை நிர்வகிக்கும் பொறுப்பு முற்றிலும் உங்களுடைய பொறுப்பாகும். அது மட்டுமின்றி, உங்கள் அக்கவுன்ட் மூலம் நடத்தப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீங்களே முற்றிலும் பொறுப்பாவீர்கள். உங்கள் அக்கவுன்ட் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டால் அது குறித்து , அல்லது வேறு பாதுகாப்பு மீறல்கள் குறித்து தோழி.காமுக்கு உடனடியாகத் தெரிவிக்க ஒப்புக்கொள்கிறீர்கள். உறுப்பினரின் அந்தரங்கம் தனது உறுப்பினர்களின் அந்தரங்கத்தை மதிப்பது தோழி.காமின் கொள்கை. இருப்பினும் , ( 1) சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லது சட்ட செயல்முறைக்குக் கீழ்ப்படிய; ( 2) தோழி.காம் அல்லது அதன் கூட்டு நிறுவனங்களின் உரிமைகளையோ சொத்துகளையோ பாதுகாக்க; ( 3) விதிமுறைகளை செயல்படுத்த; அல்லது (4) தனது உறுப்பினர்களின் அல்லது பிறரது நலன்களைப் பாதுகாக்க அவசியம் என்று தோழி.காம் உறுதியுடன் நம்பினாலொழிய தோழி.காம் உங்களைப் பற்றிய சொந்தத் தகவல்களையோ நீங்கள் தோழி.காம் சேவையையும் அதன் உள்ளடக்கத்தையும் பயன்படுத்தும் விதத்தைப் பற்றிய தகவல்களையோ உங்கள் முன்அனுமதியின்றிக் கண்காணிக்கவோ திருத்தவோ மாற்றவோ செய்யாது. உறுப்பினரின் நடத்தை சேவையை நீங்கள் பயன்படுத்துவதற்கான ஒரு நிபந்தனையாக , நீங்கள் தோழி.காம் சேவையைச் சட்டவிரோதமான அல்லது இந்த விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் அறிவிப்புகள் தவிர்க்கும்படி விதிக்கிற எந்த ஒரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்த மாட்டீர்கள் என்று தோழி.காமுக்கு உத்தரவாதம் அளிக்கிறீர்கள். இச்சேவை தனிநபர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இச்சேவையை அனுமதியின்றி வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதோ அதன் சேவைகளை மறுவிற்பனை செய்வதோ கூடாது. உள்ளூர் , மாநில, தேசிய மற்றும் சர்வதேசச் சட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இச்சேவையின் வாயிலாக நீங்கள் நடத்தும் தரவுப் பரிமாற்றத்தின் உள்ளடக்கம் உள்பட உங்கள் அக்கவுன்ட் அல்லது கடவுச் சொல்லில் ஏற்படும் நடவடிக்கைகள் அல்லது பிழைகள் அனைத்திற்கும் நீங்களே முற்றிலும் பொறுப்பாவீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள். பின்வருவன நீங்கள் ஒப்புக்கொள்ளும் விதிமுறைகளில் சில:
தோழி.காமுக்கு இச்சேவையையோ அதன் பயனர் பயன்பாட்டையோ கண்காணிக்கும் அல்லது பயனர் அமர்வின் உள்ளடக்கத்தைச் சேமித்துவைக்கும் கட்டாயம் ஏதுமில்லை. இருப்பினும் , இது தொடர்பான சட்டம், கட்டுப்பாடு, சட்ட நடைமுறை அல்லது அரசு வேண்டுகோளுக்கிணங்க எத்தகவலையும் எல்லா நேரமும் கண்காணிக்க, பரிசீலிக்க மற்றும்/அல்லது பிறருக்குத் தெரியவைக்க தோழி.காமுக்கு உரிமை உண்டு. சேவை நிறுத்தம் தோழி.காம் எந்நேரத்திலும், காரணத்துடன் அல்லது காரணமின்றி, முன்னறிவிப்புடன் அல்லது முன்னறிவிப்பின்றி, இச்சேவையின் ஒரு பகுதியை அல்லது மொத்த சேவையையும் அது தொடர்பான சேவைகளையும் நீங்கள் பயன்படுத்த இயலாத வகையில் உடனடியாக நிறுத்தலாம். தோழி.காம் உங்கள் அக்கவுன்ட்டிற்கான சேவையை செயலின்மை காரணமாகவும் நிறுத்தலாம். செயலின்மை என்பது சேவையில் ஒரு நீடித்த கால அளவிற்கு அக்கவுன்ட்டிற்குள் நுழையத் ( sign-in) தவறுதல் என வரையறுக்கப்படுகிறது. இக்கால அளவை தோழி.காம் நிர்ணயிக்கிறது. சேவை நிறுத்தப்பட்டதும் சேவையைப் பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமை உடனடியாகக் காலாவதியாகிறது. நீங்கள் உங்கள் அக்கவுன்ட்டிற்கான சேவையை நிறுத்த விரும்பினால் அவ்வாறு நிறுத்துவதற்கான ஒரே வழிமுறை , சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாகும். உங்கள் அக்கவுன்ட்டின் உள்ளடக்கத்தைப் பராமரிக்கவோ உங்களுக்கு அல்லது ஒரு மூன்றாம் தரப்புக்குப் படிக்காத அல்லது அனுப்பப்படாத சேதிகளை அனுப்பவோ தோழி.காமுக்குக் கட்டாயம் ஏதும் இல்லை. உள்ளடக்கத்திற்கான உரிமையாளர் உரிமைகள் தோழி.காம் , அல்லது தோழி.காமின் விளம்பரதாரர்கள் அல்லது பிற உள்ளடக்கச் சேவை வழங்குநர்கள் இச்சேவை மூலம் மின்னணு ரீதியாக விநியோகிக்கும், வர்த்தக ரீதியில் அளிக்கப்படும் தகவல்களில் அல்லது விளம்பரங்களில் உள்ள உரை, மென்பொருள், இசை, ஒலி, புகைப்படங்கள், வீடியோ, சித்திரங்கள், ஓவியங்கள் உள்பட தோழி.காம் வழங்கும் அனைத்து உள்ளடக்கமும் பதிப்புரிமைகள், டிரேட்மார்க்குகள், சர்வீஸ் மார்க்குகள், பேடன்ட்கள் அல்லது பிற உரிமையாளர் உரிமைகளாலும் சட்டங்களாலும் பாதுகாக்கப்படுகிறது. இந்த உள்ளடக்கத்தை அதன் காப்பிரைட் மற்றும் பிற உரிமையாளர் உரிமை அறிவிப்புகளை நீக்காமல் வைத்திருக்கவேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் நீங்கள் உங்கள் சொந்த, வர்த்தகம் சாராத பயன்பாட்டிற்காக மட்டுமே நகல் எடுக்கலாம். சேவையின் மூலமும் அது தொடர்பான வலையகங்கள் மூலமும் கிடைக்கும் நிரல்கள் மற்றும் மென்பொருள்கள் உட்பட எந்த உள்ளடக்கத்தையும் மாற்றவோ நகலெடுக்கவோ மறுவெளியீடு அல்லது மறுபிரசுரம் செய்யவோ தரவேற்றவோ அனுப்பவோ விநியோகிக்கவோ கூடாது. சேவைக்கான விதிமுறைகளிலும், உறுப்பினர் கொள்கைகளிலும் செய்யப்படும் மாற்றங்கள் சேவையின் பயன்பாடு தொடர்பான விதிமுறைகள் அல்லது கொள்கைகளில் எந்த நேரத்திலும் மாற்றங்கள் செய்யவும் விதிமுறைகளின் புதுப்பிக்கப்பட்ட வடிவம் ஒன்றை இவ்வலையகத்தில் ஏற்றுவது குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்தவும் தோழி.காமுக்கு உரிமை உண்டு. சேவைக்கான விதிமுறைகளைத் தவறாமல் மறுபரிசீலனை செய்வது உங்கள் பொறுப்பாகும். அத்தகைய மாற்றங்களுக்குப் பிறகும் சேவையை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் அது அம்மாற்றங்களை நீங்கள் ஏற்பதாகும். பொது இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டுச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டது. இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் எல்லா அம்சங்களுக்கும் (இப்பத்தியையும் உள்ளடக்கி) அங்கீகாரம் அளிக்காத எந்த அதிகார வரம்பில் இச்சேவையைப் பயன்படுத்துவதற்கும் அனுமதி இல்லை. இந்த ஒப்பந்தத்தின் விளைவாகவோ இச்சேவையின் பயன்பாட்டினாலோ உங்களுக்கும் தோழி.காமுக்கும் இடையில் தொழிற்கூட்டு , வர்த்தகக் கூட்டு, ஊழியம் அல்லது முகவர் உறவு எதுவும் இல்லை என நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த ஒப்பந்தத்தை தோழி.காம் செயல்படுத்துவது தற்போது உள்ள சட்டங்களுக்கும் சட்ட ரீதியான செயல்முறைக்கும் உட்பட்டது. உங்கள் தோழி.காம் வலையகம்/சேவைகள் பயன்பாடு குறித்த அரசு சார்ந்த, நீதிமன்ற, சட்ட அமலாக்க வேண்டுகோள்களுக்குப் பணியவோ இத்தகைய பயன்பாடு தொடர்பாக தோழி.காமுக்கு வழங்கப்படும் அல்லது தோழி.காமால் திரட்டப்படும் தகவல்கள் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யவோ தோழி.காமுக்கு உள்ள உரிமையை இந்த ஒப்பந்தத்தில் உள்ள எதுவும் குறைக்கவில்லை. மேற்குறிப்பிடப்பட்ட உத்தரவாத மறுப்புகள், பொறுப்பாதல் கட்டுப்பாடுகள் உள்பட இந்த ஒப்பந்தத்தின் எந்தப் பகுதியாவது செல்லாதது என்றோ அமலாக்கவியலாதது என்றோ நடைமுறையிலுள்ள சட்டங்களின்படி கருதப்பட்டால் அந்தச் செல்லாத அல்லது அமலாக்கவியலாத பகுதிக்கு பதிலாக முதலில் உருவாக்கப்பட்ட விதிமுறையின் நோக்கத்திற்கும் ஒப்பந்தத்தின் மற்ற பகுதிகளுக்கும் பொருந்தும் செல்லுபடியாகிற, அமல்படுத்தவியலும் ஒரு பகுதி இடம்பெற்றுத் தொடரும். இந்த ஒப்பந்தம் வேறு விதமாக இங்கு குறிப்பிடப்படாத பட்சத்தில் தோழி.காம் வலையகம்/சேவைகள் தொடர்பாக தோழி.காமுக்கும் பயனாளருக்கும் இடையில் எலக்ட்ரானிக், வாய்மொழியாக, எழுத்துபூர்வமாக முன்பு அல்லது சமகாலத் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் முன்வரைவுகள் அனைத்திற்கும் பதிலாக தோழி.காமுக்கும் பயனாளருக்கும் இடையிலான ஒட்டுமொத்த ஒப்பந்தமாக அமைகிறது. இந்த ஒப்பந்தத்தின் அல்லது மின்னணு வடிவத்தில் தரப்படும் எந்த அறிவிப்பின் அச்சு வடிவமும் அச்சு வடிவத்தில் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் பிற தொழில் ஆவணங்கள் மற்றும் பதிவுகளுக்குரிய அதே மதிப்பிலும் அதே நிபந்தனைகளுக்குட்பட்டும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலான அல்லது இந்த ஒப்பந்தம் தொடர்பான நீதிமன்ற அல்லது நிர்வாகச் செயல்முறைகளில் சமர்ப்பிக்கப்படலாம். இச்சேவையால் அல்லது இச்சேவை தொடர்பாக எழும் எந்தப் புகார் மீதான நடவடிக்கையும் ( cause of action) அப்புகார் எழுந்த ஓர் (1) ஆண்டிற்குள் தொடங்கப்படவேண்டும் எனவும் , இல்லையேல் அத்தகைய நடவடிக்கைக்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் எனவும் நீங்களும் தோழி.காமும் ஒப்புக்கொள்கிறீர்கள். சேவைக்கான விதிமுறைகளில் உள்ள பகுதிகளின் தலைப்புகள் தரப்புகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன; அவற்றுக்குச் சட்டபூர்வ அல்லது ஒப்பந்த முக்கியத்துவம் ஏதும் இல்லை.
|
