![]()
இழப்பிற்குப் பிறகு
குழந்தைகளின் தேவை பெற்றோரின் புரிதல்
- டாக்டர் எஸ். யமுனா
நான்கு வயதுச் சிறுமியான சம்யுக்தாவின் பாட்டி இறந்துவிட்டார். பாட்டியின் உயிர் பிரியும்போது சம்யுக்தா அங்கே இல்லை. பாட்டியால் இனி தன்னோடு ஒரு வழியாக அந்த நேரத்தில் சம்யுக்தா சமாதானமடைந்தாள், சிறிது நேரம் கழித்து பாட்டி தனக்குக் கதைகள் சொல்வார். இனி யார் எனக்குக் கதை சொல்வார்கள்? என்று கேட்டாள். சம்யுக்தாவின் அம்மா நான் உனக்குக் கதை சொல்கிறேன் என்றார். அவளிடம் சிரிப்பு மலர்ந்தது. கொஞ்ச நேரம் கழித்து நான் பள்ளிக்குச் சென்று திரும்பியவுடன் பாட்டி எனக்கு மொறுமொறுப்பான தோசை செய்து தருவார். யார் இருக்கிறார்கள் இப்போது பள்ளி விட்டு வந்ததும் தோசை செய்து தர என்று கேட்டாள் சம்யுக்தா. நான் செய்து தருகிறேன் என்றார் அம்மா. சம்யுக்தா சமாதானமடைந்தாள். வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். உறவுக்காரர்கள் பல இடங்களிலிருந்தும் வந்தார்கள். பாட்டியின் இறப்புக்குப் பிறகு சம்யுக்தா எதுவும் பேசாமல் தன் வழக்கமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அறிந்தார்கள்.பாட்டியின் இறப்புக்குப் பிறகு பதினைந்து நாள்களில் வீடும் குடும்பத்தினரும் இயல்பு நிலையை அடைந்தார்கள். சம்யுக்தா வீடு திரும்பும் போது அவளை வீட்டில் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், ஆறுமணி வரை குழந்தைகள் பாதுகாப்பு நிலையத்தில் சம்யுக்தாவை விட்டுவிடத் தீர்மானித்தார் சம்யுக்தாவின் அம்மா, முதல் நாள் எந்தவிதப் படபடப்பும் ஆரவாரமும் இல்லாமல் அந்த நிலையத்தில் இருந்தாள். இரண்டாவது நாள் மாலை ஆறுமணிக்கு அம்மாவைப் பார்த்ததும் சம்யுக்தா அழ ஆரம்பித்தாள். அடுத்த நாள் பள்ளிக் கூடத்திற்குப் போகமாட்டேன் என்றாள். மேலும் நான் பள்ளிக்குப் போக வேண்டுமென்றால் பள்ளியை விட்டு வரும் போது, பள்ளிக்கூடப் பேருந்திலிருந்து தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அம்மா அல்லது அப்பா யாராவது தன்னோடு வீட்டிலிருக்க வேண்டும். அப்படியென்றால் நான் பள்ளிக்குப் போகிறேன் என்றாள். தங்களது நிலையைக் குழந்தை புரிந்துகொள்ளவில்லை என்று குற்றஞ் சாட்டினார் சம்யுக்தாவின் அம்மா. தன்னுடைய பாதுகாப்பு, உணவு, உரையாடல் என்று எல்லாவற்றிற்கும் முழுமையாகப் பாட்டியைச் சார்ந்திருந்தது குழந்தை. எல்லாமுமாக இருந்த அவள் பாட்டி இறந்தபோது, துயரமடைந்தவள், நிரந்தரமாகப் பாட்டியின் இழப்பையும் உணரத் தொடங்கினாள். தானே உடன் இருப்பதாக சம்யுக்தாவின் தாய் உறுதியளித்தார். சம்யுக்தாவும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டாள். அந்த வாக்குறுதிகள் ஏதும் பின்பற்றப்படவில்லை. குழந்தை தனது இருப்பினைத் தடுமாற்றத்தோடு இருப்பதாக உணரத்தொடங்கினாள். பள்ளியிலிருந்து வந்ததும் விடப்படும் அந்தப் பாதுகாப்பு மையத்தில் இருப்பதற்கு மறுத்தாள். குழந்தை அழுதபோதும் அவளுடைய தாய் குழந்தையின் தேவையை, மனநிலையைப் புரிந்துகொள்ள எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை. ஆனால், தங்களது சூழ்நிலையைக் குழந்தை புரிந்துகொள்ளவில்லை என்று தாய் வருத்தப்பட்டார். குழந்தைகள் தாங்கள் நேசிக்கும் ஜீவனின் இழப்பிற்காகத் துயரமடைகிறார்கள். குழந்தைகளுக்கு அந்த இழப்பிற்காக அழத் தெரியாது. தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் தெரியாது. தம்மை விரும்பியவரது இல்லாமை தரும் இழப்பை உணரத் தொடங்கும்போதே தங்களது மன அழுத்தத்தை, துயரத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதை சுயநலமாக வளர்ந்தவர்கள் புரிந்து கொள்கிறார்கள். குழந்தைகளிடம் ஆரம்பத்திலிருந்தே எதிர்காலம் குறித்த உண்மைகளைச் சொல்வதே நல்லது. பொய்யான வாக்குறுதிகளால் குழந்தைகளை ஏமாற்றுவது சரியல்ல. குழந்தைகள் இழப்பை ஏற்றுக் கொள்ள அது குறித்துப் பக்குவப்பட சிறிது காலம் தேவை. குழந்தைகள் தங்களது இழப்பை ஈடுசெய்து கொள்ளக் கால அவகாசம் தரப்பட வேண்டும். நல்லவிதமான வெளிப்பாடு வரும் வரை அவர்களைச் சரியாகக் கையாள வேண்டும். இதிலிருந்து விடுபட்டு அன்றாட நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள அவர்களுக்கு நேரமும் தயாரிப்பும் தேவை. உடனடியான மாற்றங்கள் அவர்களிடம் விபரீதமான விளைவுகளை உண்டாக்கும். |
டாக்டர் யமுனா, சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நல சிறப்பு மருத்துவர். இவரை dryamunapaed@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

எதுவும் பேச முடியாது என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தாள். பாட்டி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தன் அம்மாவிடம் கேட்டாள். அம்மா சொன்னார், பாட்டி தெய்வமாகிவிட்டார். இனிமேல் அவர் பேச மாட்டார் என்று.